சுனாமியைத் தாங்கி கஜா புயலில் வீழ்ந்த அலையாத்திக்காடுகளுக்கு ரசாயன கழிவுநீரால் ஆபத்தா? தற்போதைய நிலை பற்றி பள்ளி மாணவர்கள் கள ஆய்வு

  |   Thiruvarurnews

முத்துப்பேட்டை, அக்.17: முத்துப்பேட்டையில் உள்ள சுனாமியை தாங்கி கஜாபுயலில் வீழ்ந்துபோன அலையாத்திகாடுகளின் தற்போதைய நிலை குறித்து அரசு பள்ளி மாணவர்கள் களஆய்வு மேற்கொண்டனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் ஆசியா கண்டத்தில் காணப்படக்கூடிய மிகப்பெரிய அலையாத்தி காடாகும். புயல் மற்றும் சூறாவளி காற்றிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களையும், கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக விளங்குகின்றன. மேலும் கடலோரங்களில் ஏற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது. மொத்தம் முத்துப்பேட்டை பகுதியில் 11,885,91 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படக்கூடிய இக்காடுகள் தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதி கிழக்கு வரை நீண்டுள்ளது. முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் அமைந்துள்ள லகூன் என்ற காயல் பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டின் அக்டோபரிலிருந்து பிப்ரவரி வரை பல்வேறு வகை நீர்ப்பறவைகள் வருகின்றன. மொத்தத்தில் 147 சிற்றின வகை பறவைகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது முதன் முதலில் தமிழகத்தை தாக்கிய பகுதி முத்துப்பேட்டை. இந்த அலையாத்தி காடுகளால்தான் சுனாமியின் அலை தடுக்கப்பட்டு இப்பகுதி மக்களை காப்பாற்றியது.100ஆண்டுகளுக்கு மேல் வனத்துறையினரும் இயற்க்கை ஆர்வலரும் பாதுக்காத்து வந்த இந்த அறிய பொக்கிஷம் இன்று முத்துப்பேட்டை பகுதி மக்களை மட்டுமல்ல நமது தேசத்தின் அடையாளமாக இருந்து கஜா புயலால் அழிந்துள்ளது. இதன் மூலம் இந்த அலையாத்திகாட்டின் வளர்ச்சி 25ஆண்டுகள் பின்தங்கி விட்டது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/AGXZzwAA

📲 Get Thiruvarurnews on Whatsapp 💬