சிபிஐ ஆபீசர் எனக்கூறி துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் கைது

  |   Kanyakumarinews

தக்கலை: தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியில் வாலிபர் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி வருவதாக தக்கலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பயிற்சி உதவி ஆய்வாளர் எபநேசர் மற்றும் போலீசார் அப்பகுதியில் சென்று குறிப்பிட்ட அந்நபரை பிடித்து தக்கலை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். போலீசாரின் விசாரணையின் போது, அவர் கேரள மாநிலம் மைலக்கரையைச் சேர்ந்த லாஜி மார்டின் தாமஸ் (38) என்பதும், முளகுமூட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 3 மாதமாக ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.

மேலும் அவர் துப்பாக்கியை காட்டி அந்தப்பகுதியில் உள்ளவர்களிடம் தான் ஒரு சிபிஐ ஆபீசர் எனவும், சிலரிடம் சிஐடி எனவும் கூறியுள்ளார். இதற்காக ஆன்லைனில் துப்பாக்கி போன்ற பொம்மை துப்பாக்கி வாங்கி அதனை ரிவால்வர் போன்று செட்டப் செய்து வந்துள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து பொது இடத்தில் பொதுமக்களை அச்சுறுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்து ேபாலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/BcJuhQAA

📲 Get Kanyakumarinews on Whatsapp 💬