சிவகங்கையில் வியாபாரியை கடத்த முயன்ற 4 பேர் கைது

  |   Sivaganganews

சிவகங்கை, அக். 17: சிவகங்கையில் வியாபாரியின் கை, கால்களை கட்டி காரில் கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை அருகே சக்கந்தியை சேர்ந்தவர் வீரபாண்டி (50). வியாபாரி. திண்டுக்கல் மாவட்டம் மாமரத்துபட்டியை சேர்ந்தவர்கள் செல்வராஜ் (33), வெள்ளைச்சாமி(35). வீரபாண்டியிடம், செல்வராஜும், வெள்ளைச்சாமியும் விறகு வாங்குவதற்காக, ரூ.2 லட்சத்து பத்தாயிரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் 5 மாதங்களாகியும் வீரபாண்டி விறகு வாங்கி தரவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுதொடர்பாக வீரபாண்டி மீது புகார் அளிக்க தனது ஆதரவாளர்களுடன் சிவகங்கை நகர் காவல்நிலையத்திற்கு செல்வராஜும், வெள்ளைச்சாமியும் காரில் வந்தனர்.அங்கு பணியில் இருந்த போலீசார், காரில் இருந்து சத்தம் வருவதை கேட்டு கதவை திறந்து பார்த்தனர். அங்கு கை, கால்கள் கட்டிய நிலையில் வீரபாண்டியன் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில் செல்வராஜ், வெள்ளைச்சாமி மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சிவா (37), ஐயப்பன் (32) ஆகியோர் வீரபாண்டியை காரில் கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வீரபாண்டியை மீட்ட போலீசார், 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/XmsgEAAA

📲 Get Sivaganganews on Whatsapp 💬