ஜெயங்கொண்டம் அருகே பித்தளை பாத்திரங்கள் திருடிய 2 பேர் கைது

  |   Perambalurnews

ஜெயங்கொண்டம், அக். 17: ஜெயங்கொண்டம் அருகே பித்தளை பாத்திரங்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கஸ்தூரி (50). இவர் தனது வீட்டின் முன்பு பித்தளை பாத்திரங்களை கழுவி காய வைத்து விட்டு வெளியில் சென்று விட்டார். பி்ன்னர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது காய வைத்த பாத்திரங்களை திருடி கொண்டு 2 பேர் சென்றனர். இதை பார்த்து கஸ்தூரி சத்தம் போட்டதும் மர்மநபர்கள் 2 பேர் தப்பியோடினர்.

இதையடுத்து பொதுமக்கள் விரட்டி சென்று 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில் மருதூர் பொன்னன் புதுக்காலனியை சேர்ந்த ஏழுமலை (40), மணிகண்டன் (34) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து கஸ்தூரி அளித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து ஏழுமலை, மணிகண்டன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/TQDVggAA

📲 Get Perambalurnews on Whatsapp 💬