தொடங்கியது மழைக்காலம்; வால்பாறை மாணவர்களுக்கு இலவச - ரெயின்கோட்

  |   Coimbatorenews

ஒவ்வொரு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்ட நிலையில் கோவை மாவட்டம் மற்றும் கிழக்கு எல்லை பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வால்பாறை மலைப்பகுதிகளில் வெப்பம் குறைந்து சாரல் மழை பெய்து வருவதால் மாணவர்களும் பொதுமக்களும் வெளியில் செல்லவே சிரமப்படுகின்றனர்.

இந்த நிலையில் வால்பாறை மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக 'ரெயின்கோட்' வழங்கப்பட்டது. வால்பாறை மலைப்பகுதியில் மொத்தம் 84 அரசு பள்ளிகள் உள்ளன, அவற்றில் படிக்கும் 2532 மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட இலவச ரெயின்கோட் வழங்கப்பட்டது.. இதனால் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு சென்றுவர உதவியாக இருக்கும்....

போட்டோ - http://v.duta.us/SBg7uAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/DZ29PQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬