திடீரென இடிந்து விழும் பள்ளியின் மேற்கூறை

  |   Tiruppurnews

திருப்பூர், அக். 17: திருப்பூர் செல்லம்மாள் காலனி மாநகராட்சி பள்ளியின் கட்டிட மேற்கூரைகள் திடீரென இடிந்து விழுவதால் மாணவ மாணவிகள் அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். திருப்பூர் வடக்கு கல்வி வட்டத்திற்குட்பட்ட சாமுண்டிபுரம் அடுத்த செல்லம்மாள் காலனியில் மாநகராட்சி துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் புதியதாக எல்.கே.ஜி. யு.கே.ஜி வகுப்புகளும் துவங்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் பாலமுருகன் நகர், முருகன் காலனி, ராஜீவ் நகர், வளையங்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வரும் சுமார் 280 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் கட்டிடங்கள் கட்டப்பட்டு சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆவதால், கட்டிடங்களில் அனைத்து பகுதிகளிலும் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்து வருகிறது. இதனால் அந்த பள்ளியில் படிக்ககூடிய மாணவ மாணவிகள் அச்சத்துடன் படித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டாமல் கம்பி வேலியை அமைத்துள்ளனர். இந்நிலையில் இரவு நேரங்களில் குடிமகன்கள் கம்பிவேலியை தாண்டி பள்ளிக்குள் சென்று படுத்து தூங்குகின்றனர். இதில் பள்ளியின் கழிவறைப்பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் செல்லக்கூடிய மின் மாற்றி உள்ளது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/skHbtgAA

📲 Get Tiruppurnews on Whatsapp 💬