தேன்கனிக்கோட்டை அரசுபள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

  |   Krishnagirinews

தேன்கனிக்கோட்டை, அக். 17: தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 1978 முதல்1980 ம் ஆண்டு வரை பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்பில் படித்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. அதில் பள்ளியில் படித்த 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜரத்தினம் அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், முனிசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள், சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். மேலும், தாங்கள் படித்த பள்ளிக்கு ₹50ஆயிரம் மதிப்பிலான பீரோ, சேர் உள்ளிட்ட பொருட்களும், மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் ஆகியவற்றை வழங்கினர். விழாவில் அதே பள்ளியில் படித்து தற்போது ஆசிரியர்களாகவும், காவல்துறை, வனத்துறை, மத்திய அரசு பணி, தொழிலதிபர்கள், அரசியல்வாதி என பல்வேறு துறைகளில் உள்ளவர்கள், தங்களின் பள்ளி பருவ பழைய நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் நினைவு கூர்ந்து நெகிழ்ச்சியடைந்தனர். விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் நேரு, முரளி, சௌடப்பா, மாலிக்ஜான் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் முன்னாள் மாணவர் ஆசிரியர் குழந்தைஏசு நன்றி கூறினார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/GpgYMwAA

📲 Get Krishnagirinews on Whatsapp 💬