துப்புரவு தொழிலாளர்கள் நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம்

  |   Cuddalorenews

கடலூர், அக். 17: கடலூர் பெருநகராட்சி நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள துப்புரவு பணியாளர்கள் நேற்று அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.கடலூர் பெரு நகராட்சியில் 230 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சமீப காலமாக கடும் நிதி நெருக்கடியில் உள்ள நகராட்சி நிர்வாகத்தால் துப்புரவு பணியாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் உரிய காலத்தில் வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்க முடியவில்லை. 25 ஆண்டுகள் பணியாற்றி பணிமுடித்த 21 துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அரசு வெகுமதி மற்றும் மூன்றாண்டுகளாக நிலுவை தொகை ரூ.42 ஆயிரம் வழங்கப்படவில்லை. பணியாளர்கள் சொசைட்டிக்கு கட்ட வேண்டிய தொகை ரூ.2 கோடியை நகராட்சி நிர்வாகம் கட்டாமல் உள்ளது. சம்பளத்தில் பிடிக்கப்பட்ட ஜிபிஎப் மாத தவணை மற்றும் கடன் தொகை பிடித்தம் ஜிபிஎப் கணக்கில் காட்டாமல் இரண்டாண்டுகளாக ரூ.3.2 கோடி நிலுவை தொகை வைத்துள்ளது. ஜிபிஎப் வட்டி பணம் ஜிபிஎப் கணக்கில் சேர்க்காமல் பத்தாண்டுகளாக நிலுவையில் வைத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்ற 6 தொழிலாளர்களுக்கு ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு சம்பளம் மற்றும் சிறப்பு வருங்கால வைப்புநிதி மற்றும் பணிக்கொடை திட்டத்தின் மூலம் ரூ.17 லட்சம் வழங்கப்படவில்லை....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/VPUNGgEA

📲 Get Cuddalorenews on Whatsapp 💬