தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து

  |   Chennainews

சென்னை: தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிடப்பட்ட அறிக்கை: 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கடற்கரையில் இருந்து காலை 3.55க்கு புறப்படும் ரயில் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையிலும், 4.55க்கு புறப்படும் ரயில் காட்டாங்கொளத்தூர்-செங்கல்பட்டு இடையிலும், 4.35 க்கு புறப்படும் ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலும் ரத்து செய்யப்படுகிறது. 17, 18 மற்றும் 19ம் தேதி செங்கல்பட்டில் இருந்து காலை 3.55 க்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு-காட்டாங்கொளத்தூர் இடையிலும், 4.50 க்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையிலும், 4.35 க்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையிலும், 6.40 மணிக்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு-காட்டாங்கொளத்தூர் இடையிலும் ரத்து செய்யப்படுகிறது.

20ம் தேதி கடற்கரையில் இருந்து 3.55 க்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு - காட்டாங்கொளத்தூர் இடையிலும், 4.35 க்கு புறப்படும் ரயில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலும் ரத்து செய்யப்படுகிறது. இதைப்போன்று செங்கல்பட்டில் இருந்து 3.55 க்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு-காட்டாங்கொளத்தூர் இடையிலும், 4.50 க்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையிலும், 6.40 க்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு-காட்டாங்கொளத்தூர் இடையிலும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போட்டோ - http://v.duta.us/yeB9ZQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/gn2GGwAA

📲 Get Chennainews on Whatsapp 💬