திருச்சி கோர்ட் அளித்த கஸ்டடி உத்தரவு நகல் பெங்களுரூ சிறைக்கு அனுப்பி வைப்பு நகை கொள்ளையன் முருகனிடம் விரைவில் விசாரணை மாநகர போலீஸ் கமிஷனர் பேட்டி

  |   Tiruchirappallinews

திருச்சி, அக். 17: நகை கொள்ளையன் முருகனிடம் திருச்சி தனிப்படை விசாரிக்க ஏதுவாக திருச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு அனுமதி கடித நகல் பெங்களூரு சிறையில் அளிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் கஸ்டடி எடுத்து விசாரிக்க உள்ளதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறினார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளிகள், பொருட்கள் வாங்க மக்கள் மெயின்கார்கேட் பகுதிகளில் குவிவார்கள். இதனால் அங்கு கூட்ட நெரிசலாக காணப்படும். எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி திருச்சி என்எஸ்பி ரோடு, தெப்பக்குளம் அருகே தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேற்று திறந்து வைத்தார். இதில் துணை கமிஷனர் நிஷா, மயில்வாகனன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் கமிஷனர் அமல்ராஜ் அளித்த பேட்டி: தீபாவளி பண்டிக்கைக்காக என்.எஸ்.பி ரோடு, பெரிய கடை வீதி, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் 200 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். நகை கடையில் நடந்த கொள்ளையில், கொள்ளையர்கள் நான்கு முதல் ஐந்து நாட்கள் சுவரில் துளைப்போட்டு உள்ளனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/dmdDBgAA

📲 Get Tiruchirappallinews on Whatsapp 💬