திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 44 ஊர்க்காவல் படை பணி விண்ணப்பிக்க அழைப்பு எஸ்பி தகவல்

  |   Tiruchirappallinews

திருச்சி, அக். 17: திருச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல்ஹக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்ட ஊர்க்காவல்படையில் தற்போது 42 ஆண் ஊர்க்காவல் படையினரும், 2 பெண் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 44 காலி பணி இடங்கள் உள்ளது. இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி அல்லாதோர் வயது 18 முதல் 45 வயதிற்குள்ளும், உயரம் ஆண்களுக்கு 165 செ.மீ., பெண்களுக்கு 155 செ.மீ. இருக்க வேண்டும். தகுதி உள்ளவர்கள் திருச்சி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறிப்பாக எந்த ஒரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்க கூடாது.

விளையாட்டு வீரர்கள் மற்றும் பேண்டு வாத்தியம் வாசிக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களுடன் நேரிலோ அல்லது ரூ.5 தபால் தலை ஒட்டிய சுய விலாசம் எழுதிய உறையுடன் காவல் சார்பு ஆய்வாளர், ஊர்க்காவல்படை அலுவலகம், சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை வளாகம், திருச்சி-20 என்ற முகவரிக்கு வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9942988642, 0431-2333704 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/GHtC0QAA

📲 Get Tiruchirappallinews on Whatsapp 💬