திருப்போரூர் ஒன்றியத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

  |   Kanchipurannews

திருப்போரூர், அக். 17: திருப்பேரூர் ஒன்றியத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த மக்களவை தேர்தலின்போது 237 வாக்குச்சாவடிகள் இருந்தன. சமீபத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக வார்டு வரையறை செய்யும் பணி நடந்தது. அப்போது, பொதுமக்களிடம் இருந்து தங்களது வீடுகள் அமைந்துள்ள பகுதிக்கும், வாக்குச்சாவடி மையத்துக்கு அதிக தூரம் இருப்பதால் தங்கள் பகுதியை ஒட்டியுள்ள பள்ளியில் வாக்குச்சாவடி மையம் உருவாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இவ்வாறு அளிக்கப்பட்ட கோரிக்கைகளில் தகுதியானவை ஏற்கப்பட்டன.இயைடுத்து, கூடுதல் வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு, அதனை இணைத்து தற்போது புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஏற்கனவே, திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் இருந்த 237 வாக்குச்சாவடிகள் தற்போது, 252 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருப்போரூர் பேரூராட்சியில் கண்ணகப்பட்டு நடுநிலைப்பள்ளி மற்றும் படவேட்டம்மன் கோயில் தெரு தொடக்கப்பள்ளி ஆகிய மையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நெல்லிக்குப்பம் ஊராட்சி அம்மாப்பேட்டை கிராமத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி உள்ளதாலும், வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததாலும் 2 புதிய வாக்குச்சாவடிகள் கூடுதலாக உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்போரூர் ஒன்றியத்தில் படூர், தாழம்பூர், தண்டலம் ஆகிய ஊராட்சிகளிலும் தலா 2 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/Cjw0rQAA

📲 Get Kanchipurannews on Whatsapp 💬