திருமங்கலம் மீனாட்சியம்மன் கோயிலில் தர்மம் எடுத்த மாற்றத்திறனாளி 5 ஆண்டுக்கு பின்பு மகளுடன் இணைந்தார்

  |   Madurainews

திருமங்கலம், அக். 17: திருமங்கலம் மீனாட்சியம்மன் கோயிலில் தர்மம் எடுத்த 55 வயது முதியவர் 5 ஆண்டுகளுக்கு பின்பு மகளுடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை உண்டாகியது.ஈரோடு சூரம்பட்டி வலசுபகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (55). வாய் பேச முடியாதவர். காதும் கேட்காது. மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 2015ம் ஆண்டு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறினார். பல இடங்கில் சுற்றிதிரிந்த கிருஷ்ணன் கடந்த ஓராண்டாக மதுரை மாவட்டம் திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் முன்பு பக்தர்களிடம் தர்மம் பெற்று வாழ்ந்து வந்தார்.அவ்வப்போது கோயிலின் உளவாரபணியிலும் ஈடுபட்டு வந்தார். கிருஷ்ணன் காணாமல் போனது குறித்து அவரது மகள் லதா ஈரோடு தெற்கு போலீசில் புகார் தெரிவித்திருந்தார். வழக்குப்பதிவு செய்த ஈரோடு போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடிவந்தனர். இந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஈரோட்டைச் சேர்ந்த அபிராமி என்பவர் திருமங்கலம் மீனாட்சியம்மன் கோயிலில் சாமி கும்பிட வந்தார். கோயில் வாசலில் அமர்ந்து தர்மம் எடுத்த கிருஷ்ணனை கண்ட அவர் இது குறித்து ஈரோட்டிலுள்ள அவரது மகள் லதாவிற்கு போனில் தகவல் தெரிவித்தார்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/EA9kzQAA

📲 Get Madurainews on Whatsapp 💬