திருவாரூர் மாவட்டத்தில் மிதமான மழை: விவசாயிகள் மகிழ்ச்சி சாலையில் தண்ணீர் தேங்கியது

  |   Thiruvarurnews

திருவாரூர், அக்.17: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மிதமான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில் நடப்பாண்டில் ஏற்பட்ட கடும் குடிநீர் பஞ்சம் காரணமாக சென்னையில் பல்வேறு ஓட்டல்களில் உணவு சமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பல்வேறு தொழிற்சாலைகளும் நீரில்லாமல் மூடும் சூழல் ஏற்பட்டது. இதே போன்ற நிலை சென்னை மட்டுமின்றி மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஏற்பட்டது. இந் நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக எதிர்பாராதவிதமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையானது திறக்கப்பட்டு அதன்பின்னர் கல்லணையும் திறக்கப்பட்டது. இவ்வாறு மேட்டூர் அணை மற்றும் கல்லணை திறக்கப்பட்ட போதிலும் டெல்டா மாவட்டங்களில் பாசனவாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் சரிவர தூர்வாராததன் காரணமாக ஆற்று நீர் பாசன வாய்க்கால்களை சென்றடையாமல் வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் சம்பா சாகுபடியை மிகவும் தாமதமாக தொடங்கிய போதிலும் அதற்குரிய நீர் கிடைக்காமல் தவித்து வந்தனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/K0iKDAAA

📲 Get Thiruvarurnews on Whatsapp 💬