தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கக அலுவலக உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

  |   Tiruchirappallinews

திருச்சி. அக்.17: திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர், துணை இயக்குநர் அலுவலகங்களில் காலியாக உள்ள 4 அலுவலக உதவியாளர் (இனச்சழற்சி முறையில் பொது 1, எம்பிசி(டிஎன்சி) 1, எஸ்சி(எ)1 பெண், பெண் விதவை பிசி 1, பணிக்கு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டள்ளது. குறைந்தபட்ச கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றி வேண்டும். (எஸ்எஸ்எல்சி மேல் கல்வி தகுதியுடைய பிசி, எம்பிசி,எஸ்சி, எஸ்சி(எ), எஸ்டி வகுப்பினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை), கூடுதல் இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க விருப்பமுடையோர் கூடுதல் இயக்குநர் அலுவலகம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் 10/1 அப்துல்சலாம் தெரு, காஜாநகர், திருச்சி என்ற முகவரிக்கும், இணை இயக்குநர்/துணை இயக்குநர் I, துணை இயக்குநர் II, அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமுடையோர், இணை இயக்குநர் அலுவலகம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் 2/3, அப்துல் சலாம் தெரு, காஜாநகர், திருச்சி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 31ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். மேலும் அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களின் அறிவிப்பு https//dish.tn.gov in என்ற வலைதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/b3xyRwAA

📲 Get Tiruchirappallinews on Whatsapp 💬