தேவாலா பஜாரில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால்

  |   Nilgirisnews

பந்தலூர், அக். 17: தேவாலா பஜார் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் சிரமமபட்டு வருகின்றனர். பந்தலூர் அருகே தேவாலா பஜாரில் ஏராளமான கடைகள் மற்றும் அரசு, தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேலும் தனியார் வாகனம் மற்றும் அரசு பேருந்துகளும் தினந்தோறும் வந்து செல்கின்றன. இந்நிலையில் தேவாலா பஜாரில் தினமும் எருமை மற்றும் மாடுகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் கால்நடைகளால் விபத்தும் ஏற்படுகிறது.

இரவு நேரங்களில் கடைகளின் முன்பாக மாடுகள் படுத்து எச்சம் இடுவதால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். நகர் பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தினர். ஆனால் நகராட்சி அதிகாரிகள் கால்நடைகளை அகற்ற இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வியாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/cA8tQAAA

📲 Get Nilgirisnews on Whatsapp 💬