நீட் 😳ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் 👨உதித் சூர்யாவிற்கு ஜாமீன்⚖

✍இளவேனில்🌄

🏛சென்னையை சேர்ந்த மாணவர் 👨உதித்சூர்யா, ✍நீட் தேர்வில் 😳ஆள்மாறாட்டம் செய்து தேனி 💉மருத்துவக் 🏢கல்லூரியில் சேர்ந்த விவகாரத்தில், இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் 👮போலீசார் வழக்குப்பதிவு செய்து, 👨உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் 🤵வெங்கடேசனை ⛓கைது செய்தனர். முன்னதாக உதித்சூர்யா தனக்கு முன்ஜாமீன் கேட்டு 🏛மதுரை உயர்நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்திருந்தார். அவர் கைது⛓ செய்யப்பட்டதால், அவரது முன்ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக மாற்றி விசாரிக்கப்படும்🗣 என 🏛உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு⚖ இருந்தது. இந்த வழக்கு 🤵நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு🗣 வந்தது. மாணவர் 👨உதித்சூர்யாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்⚖. மதுரை 🤵சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன்பாக தினசரி காலை ⌚10.30 மணிக்கு உதித்சூர்யா ஆஜராக நிபந்தனை விதித்தார். 👨உதித்சூர்யாவின் வயதையும் வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார். ✍நீட் ஆள்மாறாட்ட வழக்கை பார்க்கும்போது வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இருந்து திட்டம் கிடைத்ததுபோல் உள்ளது🙄 என நீதிபதி கூறி உள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬