பேச மறுத்த மாணவியை ஆசிட் வீசி கொன்று விடுவதாக மிரட்டல்

  |   Puducherrynews

நெட்டப்பாக்கம், அக். 17:

நெட்டப்பாக்கம் அருகே போனில் பேச மறுத்த பாலிடெக்னிக் மாணவி மீது ஆசிட் வீசி கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்த திருமணமான வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி புதுச்சேரியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இவரது உறவினரான வீரப்பன் மகன் இளங்கோ (29) என்பவர் மாணவியிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இது சம்பந்தப்பட்ட மாணவிக்கு பிடிக்கவில்லை என்பதால் கடந்த ஒருவாரமாக போனை எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இளங்கோ, மாணவியின் வீட்டிற்கு சென்று என்னுடன் ஏன் பேச மறுக்கிறாய்? என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த இளங்கோ மாணவியை தாக்கிவிட்டு, என்னுடன் பேசாவிட்டால் உன் மீது ஆசிட் வீசி விடுவேன் என்று கொலைமிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்று விட்டார். இதனால் பயந்துபோன மாணவி, நடந்த சம்பவத்தை குடும்பத்தினரிடம் தெரிவித்தார். பின்னர் நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் இளங்கோ மீது புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள இளங்கோவை தேடி வருகின்றனர். இளங்கோவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/qZCZpAAA

📲 Get Puducherrynews on Whatsapp 💬