போடி பஸ் ஸ்டாண்டில் கொசுக்கள் உற்பத்தி செய்தால் கடைகளின் உரிமம் ரத்தாகும்

  |   Theninews

போடி, அக்.17: போடி பஸ் நிலையத்தில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் நடந்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என நகராட்சி கமிஷனர் எச்சரித்தார்.போடி பஸ் நிலையத்தில் டெங்கு தடுப்பு மற்றும் திடக் கழிவு மேலாண்மை குறித்து நகராட்சி கமிஷனர் சத்யநாதன், துணை கலெக்டர் நிறைமதி ஆகியோர் ஆய்வு செய்தனர். பயணிகள் நிழற்குடைகளில் கிடந்த மது பாட்டில்களையும் குப்பை கழிவுகளையும் அகற்ற உத்தரவிட்டனர். முறையற்ற நிலையில் நிறுத்தப்பட்டிருந்த அரசு மற்றும் தனியார் பஸ்களை சரியாக நிறுத்தவும், கார்கள், டூவீலர்கள் பஸ்ஸ்டாண்டிற்குள் நிறுத்துவதை கண்டித்தனர். கடைகளின் உணவு பண்டகங்களின் தரம், பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு செய்தனர்.பின்னர் கமிஷனர் சத்யநாதன் கூறுகையில், பஸ் நிலையத்திற்குள் பயணிகள் அமரும் பகுதிகளில் குப்பைகளை போடுவது கூடாது, டெங்கு பரவி வரும் நிலையில் சுகாதாரம் காக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடை பாதைகளை வழி மறித்து இடையூறாக இரு சக்கரம் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தக் கூடாது, மீறினால் பறிமுதல் செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு கொண்டு செல்லப்படும். கடைகளில் உணவு பண்டங்கள் தரமாக தயாரிக்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் நடந்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார். அப்போது நகராட்சி உதவி பொறியாளர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், சேகர், கோபாலகிருஷ்ணன், சுல்தான் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/BSyHXAAA

📲 Get Theninews on Whatsapp 💬