பெண்ணை தாக்கிய 3 பேர் அதிரடி கைது

  |   Cuddalorenews

சிதம்பரம், அக். 17: சிதம்பரம் அருகே மது குடித்துக்கொண்டிருந்த கும்பல், அவ்வழியே சென்ற பெண்ணிடம் தகராறு செய்து கட்டையால் தாக்கினர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வால்காரமேடு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி பூங்கொடி (35). இவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் பண்ணப்பட்டு பகுதியை சேர்ந்த திருஞானம் மகன் கலைவாணன் (24) உள்ளிட்ட 6 பேர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த பூங்கொடியை 6 பேரும் வழிமறித்து தகராறு செய்து கட்டையால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பூங்கொடியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி பூங்கொடி சிதம்பரம் தாலுகா காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதில் பண்ணப்பட்டு பகுதியை சேர்ந்த கலைவாணன் (24), பிரபாகரன் (22), அருண்குமார் (24) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அசோக், ரஞ்சித், தினேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/I_I9jAAA

📲 Get Cuddalorenews on Whatsapp 💬