பாதுகாப்பான பயணத்தை கேள்விக்குறியாக்கும் ரயில்வேயை கண்டித்து ஓடும் தொழிலாளர்கள் போராட்டம்

  |   Madurainews

மதுரை, அக்.17: பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை கேள்விக்குறியாக்கும் ரயில்வே துறையை கண்டித்து எஸ்ஆர்எம்யூ ஓடும் தொழிலாளர்கள் மதுரையில் போராட்டம் நடத்தினர். ஓடும் தொழிலாளர் பிரிவு சார்பாக மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓடும் தொழிலாளர் பிரிவு ேகாட்ட செயலாளர் அழகுராஜா தலைமை வகித்தார். தலைவர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். எஸ்ஆர்எம்யூ கோட்ட செயலாளர் ரபீக், தலைவர் ரவிச்சந்திரன், உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படும் புதிய ரயில்களின் அடிப்படையில் டிரைவர்கள் பணியிடங்களை உருவாக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக புதிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதற்கு ஏற்ப டிரைவர்களை நியமிக்காமல் ரயில்வே துறை அலட்சியம் காட்டுகிறது. அதுபோல சரக்கு ரயில் ஓட்டுபவர்கள் 36 மணி நேரத்தை கடந்து விட்டால், அவருக்கு தலைமையிடத்திற்கு வருவதற்கு ஏற்ப ரயில்களை ஓட்ட அனுமதிப்பது கிடையாது. அவர்களை தலைமையிடத்திற்கு அனுப்பாமல் 4 அல்லது 5 நாட்களுக்கு வேலைவாங்கும் போக்கை கைவிட வேண்டும்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/F2Kg1AAA

📲 Get Madurainews on Whatsapp 💬