புதிய முகவரியில் தங்கமயில் ஜூவல்லரி ஷோரூம் துவக்கம்

  |   Dharmapurinews

தர்மபுரி, அக்.17: தர்மபுரி தங்கமயில் ஜூவல்லரி நான்கு ரோடு அதியமான் பை-பாஸ் ரோட்டில் (புதிய முகவரியில்) துவக்க விழா நேற்று நடந்தது. முன்னாள் எம்எல்ஏவும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான பாஸ்கர் ஜூல்லரி ஷோரூமை திறந்து வைத்தார். பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் செல்லபாண்டி, மாவட்ட துணை தலைவர் வெங்கட்ராஜ் குத்துவிளக்கேற்றினர். தங்கமயில் ஜூவல்லரி கிளை மேலாளர்கள் வெங்கடேஷ், சுரேஷ், மண்டல மேலாளர் ரகுராம் மற்றும் சீப் ஆப்ரெட்டிங் ஆபீசர் (சிஎஸ்ஆர்) விஸ்வநாராயணன் மற்றும் தங்கமயில் ஜூவல்லரியின் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். சீப் ஆப்ரெட்டிங் ஆபீசர் (சிஎஸ்ஆர்) விஸ்வநாராயணன் பேசுகையில், தமிழகமெங்கும் அதிகப்படியான ஷோரூம்களையும், 15 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களையும் கொண்ட தங்கமயில் நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு தர்மபுரியில் காலுன்றி மக்களின் பேராதரவுடன் இன்று தங்கமயில் விற்பனையில் முன்னணி நிறுவனமாக உள்ளது. திறப்பு விழா சலுகையாக 4 ஸ்டார் ஆபர் வழங்கப்படுகிறது. தங்கம் பவுனுக்கு ₹1000 தள்ளுபடி, வெள்ளி கிலோவிற்கு ₹2 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படுகிறது. வைரம் காரட்டிற்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்படுகிறது. சேமிப்புத்திட்டத்தில் சேரும் அனைவருக்கும் நிச்சயப்பரிசு வழங்கப்படும். இச்சலுகை வரும் நவம்பர் 3ம் தேதி வரை மட்டுமே என்றார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/xqAbnQAA

📲 Get Dharmapurinews on Whatsapp 💬