பெரம்பலூரில் மின்னல் தாக்கி செல்போன் டவர் கட்டுப்பாட்டு அறையில் ஒயர்கள் கருகியதுமாடு மேய்த்த பெண்ணும் பலி 2 நாளில் 2 பேர் இறந்த பரிதாபம்

  |   Perambalurnews

பெரம்பலூர், அக். 17: பெரம்பலூரில் நேற்று பெய்த மழையின்போது மின்னல் தாக்கி செல்போன் டவர் கட்டுப்பாட்டு அறையில் ஒயர்கள் கருகின. மேலும் இடிதாக்கி மாடு மேய்த்த பெண்ணும் பலியானார். 2 நாட்களில் மின்னல் தாக்கி 2 பேர் பலியாகியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் மானாவாரி சாகுபடி நிலப்பரப்புகளை கொண்ட பகுதியாகும். ஆண்டு சராசரி மழையளவு 861 மில்லி மீட்டராகும். 2017ம் ஆண்டு பருவமழைகள் பொய்த்துப்போய் 1999 முதல் 2019 வரையென 20 ஆண்டுகளில் மிக குறைவாக அதாவது 512 மி.மீ., மழை பெய்ததால் கடும் வறட்சி ஏற்பட்டு விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது. கடந்தாண்டு அதைவிட கொஞ்சம் அதிகமாக பெய்தபோதும் பருவம் தப்பி பெய்து விவசாயிகளை வானம் வஞ்சித்து தான் போனது.

இந்நிலையில் நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 200 மி.மீ., மழையென ஆண்டு சராசரி மழையில் 25 சதவீத மழை கூட பெய்யாதிருந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் தென்மேற்கு பருவமழை குறிப்பிட்ட அளவுக்கு பெய்ததால் பெரம்பலூர் மாவட்டத்தில் கீழப்பெரம்பலூர், வடக்கலூர் ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தன. 8 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 15 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் நிரம்பியிருந்தன. அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும் மாதங்கள் என கண்டறியப்பட்டுள்ள நிலையில் அக்டோபர் முதல் வாரம் மழை பெய்யாதிருந்தது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/JHEQTAAA

📲 Get Perambalurnews on Whatsapp 💬