போலீசார் விசாரணை புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் எதிர் கட்சியினர் கனவு பலிக்காது

  |   Nagapattinamnews

காரைக்கால், அக்.17: புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் எதிர்கட்சியினரின் கனவு பலிக்காது என புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நாஜிம் காரைக்காலில் கூறினார்.புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தொதியில், புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் வெற்றிபெற்ற தொகுதியாகும். இந்த தொகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி ஆதரவுடன் போட்டியிடும் ஜான்குமாரை ஆதரித்து வரும் 17ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய வருவது குறித்தும், அதுசமயம், காரைக்கால் திமுகவினரின் காமராஜர் நகர் தொகுதியில் வாக்குச் சேகரிப்புப் பணிகளில் ஈடுபடுவதும் குறித்த ஆலோசனைக் கூட்டம், காரைக்கால் திமுக அமைப்பாளரும், காமராஜார் நகர் தொகுதி தேர்தல் பணிக்குழுவைச் சேர்ந்தவருமான முன்னாள் அமைச்சர் நாஜிம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் நாஜிம் பேசியது:இந்த தொகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி ஆதரவுடன் போட்டியிடும் ஜான்குமார் வெற்றி ஏற்கனெவே உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில், எதிர்கட்சியினரின் கனவு பலிக்காது.மேலும், காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து, பிரச்சாரம் செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 17ம் தேதி மாலை புதுச்சேரி வருகைதரவுள்ளார். அப்போது காரைக்கால் மாவட்ட திமுகவினர் பெரும் திரளாக பங்கேற்று, தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.கூட்டத்தில், காரைக்கால் திருமலைராயன்பட்டினம் தொகுதி எம்எல்ஏ கீதா ஆனந்தன், அமுதா ஆறுமுகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/HNlfxAAA

📲 Get Nagapattinamnews on Whatsapp 💬