மணத்தக்காளி கீரை மசாலா தோசை செய்யலாம் வாங்க.....

  |   Coimbatorenews

என்னென்ன தேவை?

தோசை மாவு - 100 முதல் 125 மி.லி.,

நல்லெண்ணெய் (தோசைக்கு) - 1/2 டீஸ்பூன்,

மணத்தக்காளி கீரை - 8 தண்டு,

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 25 கிராம்,

நறுக்கிய வெங்காயம் - 10 கிராம்,

பச்சை மிளகாய் - 2,

இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,

வெந்தயம் - 2 கிராம்,

மஞ்சள் தூள் - சிறிதளவு,

கடலைப் பருப்பு - 2 கிராம்,

மிளகுத் தூள் -2 கிராம்,

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,

கொத்தமல்லி இலை - சிறிதளவு,

உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

மணத்தக்காளி இலையை ஆய்ந்து, கழுவி, நறுக்கிக் கொள்ளவும். கடாயை சூடாக்கி எண்ணெய் விட்டு, அதில் கடலைப் பருப்பு, வெந்தயம், பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். நறுக்கிய மணத்தக்காளி இலையைப் போட்டு வதக்கவும். இத்துடன் மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்புச் சேர்க்கவும். அனைத்தும் உரிய பதத்தில் வெந்திருக்கின்றனவா என்று பார்க்கவும். அதன் மேல் கொத்தமல்லி இலைகளைத் தூவவும். தோசையை வார்த்து அதில் மணத்தக்காளி மசாலாவை வைத்து சூடாகப் பரிமாறவும்.

போட்டோ - http://v.duta.us/JlxtKwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/ffdJsgAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬