மாணவியை தாக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்சின்ன

  |   Cuddalorenews

சேலம், அக். 17: சின்னசேலம் அருகே மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சின்னசேலம் அருகே காளசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(30). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி(27). இவர்களுக்கு சுப என்ற 7வயது மகளும், ஒரு மகனும் உள்ளனர். சுப தற்போது காளசமுத்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறாள். வழக்கம்போல கடந்த 14ந்தேதி பள்ளிக்கு சென்ற மாணவி சுபயை பாடம் எழுதும்போது கையெழுத்து சரியில்லை என்று அவரது வகுப்பு ஆசிரியர் சரவணன் பிரம்பால் அடித்துள்ளார். இதில் சுபயின் முதுகு மற்றும் கைகளில் ரத்த தழும்பு ஏற்பட்டுள்ளதுடன், தலையிலும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது அந்த மாணவி பள்ளிக்கு போகவில்லை. மாணவியின் தந்தை கேரளாவில் கூலி வேலை செய்வதால் தற்போது மருத்துவ சிகிச்சைக்குகூட வழியில்லாமல் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள். இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து சின்னசேலம் வட்டார கல்வி அலுவலர் ராஜசேகர் விசாரணை நடத்தி அறிக்கை அளித்ததன்பேரிலும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுரையின்பேரிலும் ஆசிரியர் சரவணனை சஸ்பெண்ட் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கார்த்திகா உத்தரவிட்டுள்ளார். 2ம் வகுப்பு மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியரை மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்ட் செய்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/CN9uTwAA

📲 Get Cuddalorenews on Whatsapp 💬