மத்திய அரசை கண்டித்து கம்யூ.கட்சிகள் ஆர்ப்பாட்டம்

  |   Virudhunagarnews

விருதுநகர், அக். 17: விருதுநகரில் மத்திய பாஜ அரசின் கொள்கைகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் சார்பில் தேசம் காக்கும் போராட்டம் நடந்தது. தேசபந்து மைதானத்தில் நடந்த இந்த போராட்டத்தில்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்ஜூணன், இ.கம்யூ மாவட்ட செயலாளர் லிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில், 'மோடி அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து நூறு நாட்களில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ரூ.1.40 லட்சம் கோடி வரிச்சலுகை அளித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களாக ரயில்வே, தொலைபேசி, விமான போக்குவரத்து, ராணுவ தளவாட உற்பத்தியை உள்ளிட்ட அனைத்தையும் தனியாருக்கு தரைவார்த்துள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டத்தினால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பறிபோய் உள்ளது.அரசின் கொள்கைகளை பற்றி பேசினால் தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்படுகிறது. புதிய கல்வி கொள்கைளை திரும்ப பெற வேண்டும். முதியோர், ஆதரவற்றோருக்கான பென்ஷன் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும்.குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர்.ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெங்கட்டராமன், பாலசுப்பிரமணியன், மகாலட்சுமி, முருகன், இ.கம்யூ கம்யூனிஸ்ட் ராமசாமி, காதர்முகையதீன், சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/IxzUVQAA

📲 Get Virudhunagarnews on Whatsapp 💬