மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

  |   Krishnagirinews

கிருஷ்ணகிரி, அக். 17: மத்திய அரசை கண்டித்து, கிருஷ்ணகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இருதயராஜ், சேகர், சாம்ராஜ், சுரேஷ், நஞ்சுண்டன், ஆஞ்சலமேரி, அழகிரி, கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் ஆனந்தன் கண்டன உரையாற்றினர். இதில், ரிசர்வ் வங்கியில் இருந்து மத்திய அரசு பெற்ற ₹1.76 லட்சம் கோடியை, பொது முதலீட்டு திட்டங்களில் செலவிட வேண்டும். வேலையில்லா இளைஞர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டும் சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுகாவில் வீட்டுமனை, நிலப்பட்டா கேட்டு மனு கொடுத்துள்ள மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் வட்ட செயலாளர்கள் தேவா, மூர்த்தி, நாகராஜ், ராஜா, சின்னராஜ், மகாலிங்கம், எத்திராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகே பிரசார ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழுவைச் சேர்ந்த சிவராஜ் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் லகுமைய்யா, மாவட்ட துணைச் செயலாளர் சின்னசாமி, சுந்தரவள்ளி, பூதாட்டியப்பா, சேகர், நகர செயலாளர் அரிஹரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/9JZ5HwAA

📲 Get Krishnagirinews on Whatsapp 💬