முதலமைச்சரின் குறை தீர்ப்பு முகாமில் மனுக்களுக்கு பதிலளிப்பதில் அலட்சியம் வாக்குசாவடி கேட்டவருக்கு, வீட்டுமனை இல்லை என்று நிராகரிப்பு

  |   Kanyakumarinews

நாகர்கோவில்: நாகர்கோவிலில் நடந்த முதல்வரின் குறை தீர்ப்பு முகாமில் தங்கள் பகுதிக்கு பொது வாக்கு சாவடிவேண்டும் என்று கேட்டவருக்கு, வீட்டுமனை வழங்க இயலாது என்று அதிகாரிகள் பதிலளித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டன. குமரி மாவட்டத்திலும் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த முகாம்கள் நடந்தன. இதற்காக தாலுகா அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலகங்களில் மக்களிடம் இருந்து அதிகாரிகள் மனுக்கள் பெற்றனர். இந்த மனுக்கள் அனைத்தும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாக பிரச்னை தீர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.இதனால் மாவட்ட கலெக்டர் பொதுமக்கள் தங்கள் குறைகளை குறை தீர்க்கும் முகாமில் தெரிவிக்கலாம் என்று அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்புக்கு ஏற்ப முதல்வரின் குறை தீர்க்கும் முகாமில் ஏராளமான மனுக்கள் குவிந்தன. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த முகாமில் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு ரசீதும் கொடுத்து இருந்தனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/daiaCgAA

📲 Get Kanyakumarinews on Whatsapp 💬