மது, புகையிலை விற்பனை திருப்பூரில் 26 பேர் கைது

  |   Tiruppurnews

திருப்பூர், அக். 17: திருப்பூரில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.' திருப்பூர் சிவன் தியேட்டர் ரோடு, 60 அடி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தவலையடுத்து, திருப்பூர் வடக்கு போலீசார், அப்பகுதிகளில் கடைகளில் சோதனை நடத்தினர். இதில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ராஜா (40), விஸ்வநாதன் (26) ஆகியோரை கைது செய்தனர்.

அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி, வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீநகர், பூண்டி ரிங் ரோடு, சாமுண்டிபுரம் ஆகிய பகுதிகளில், போலீசார் சோதனை நடத்தி கண்ணன் (58), கணேசமூர்த்தி (39), ஈ.தமிழரசன் (29), பாலசுப்பிரமணியம் (48), சிவா (43), சையது ஜாபர் (50), கே.தமிழரசன் (36), செல்வம் (52), சுப்பிரமணி (63), கார்த்திகேயன் (27), ஞானபிரகாஷ் (21), மலைசாமி (40), சதாராம் (51), ஜெஸ்கர் (41) ஆகியோரை கைது செய்து, 500க்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். யூனியன் மில் ரோடு, எம்.எஸ்.நகர் ஆகிய பகுதிகளில் லாட்டரி விற்பனை செய்ததாக அழகப்பன் (33), செந்தில்குமார் (30), முத்துக்குமார் (29), அருண்பாண்டி (24), சங்கர் (32), அப்துல் கலாம் ஆசாத் (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வஞ்சிபாளையம், புது ரோடு, கோவில் வழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட மதுவிலக்கு போலீசார், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட அ.தமிழரசன் (23), அரவிந்தகுமார் (25), அழகர் (37), காளீஸ்வரன் (36) ஆகியோரை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/NT5_VAAA

📲 Get Tiruppurnews on Whatsapp 💬