வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்

  |   Puducherrynews

புதுச்சேரி, அக். 17: புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 15 நாட்களில் 180 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் என்பது வைரஸ் மூலம் பரவக் கூடிய நோயாகும். ஒரே இடத்தில் பல நாட்களாக தேங்கி நிற்கும் நீரிலிருந்து உற்பத்தியாகும் 'ஏடிஸ் எஜிப்தி' எனும் கொசுக்கள் நம்மைக் கடிப்பதால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. ஏடிஸ் கொசு கடித்த ஒருவருக்கு காய்ச்சல், தலைவலி, கண்களின் பின்புறம் வலி, உடல் சோர்வு, ரத்த அணுக்கள், ரத்த வட்டுக்கள் குறைதல் போன்ற பிரச்னை ஏற்படும். இது ஆரம்ப கட்ட அறிகுறியாகும். அதுவே நோய் கடுமையாகும்போது மூக்கு, வாய், ஈறுகளில் ரத்த கசிவு ஏற்படும். அவர்கள் உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். இந்நிலையில் அண்டை மாநிலமான தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை கடந்த 2010ல் 45 பேரும், 2011ல் 232 பேரும், 2012ல் 1871 பேரும், 2013ல் 1063 பேரும், 2014ல் 1408 பேரும், 2015ல் 803 பேரும், 2016ல் 490 பேருக்கும், 2017ல் 4,568 பேரும், 2018ல் 581 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/x4yYcwAA

📲 Get Puducherrynews on Whatsapp 💬