வங்கி கடன் செலுத்த முடியாத தொழில் நிறுவனங்களில் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்

  |   Tiruppurnews

திருப்பூர், அக். 17: ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் இயங்கி வருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. தொழில்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வங்கிகள் பல்வேறு வகையில் உதவிகரமாக உள்ளன. திருப்பூர் உள்ளிட்ட இந்திய பனியன் நகரங்களில் இருந்து கடந்த ஆண்டு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடிக்கு பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களின் பங்கு ரூ.26 ஆயிரம் கோடி. பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களுடைய பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வங்கிகளில் அடமானம் வைத்துதான், கடன் வாங்கியுள்ளனர். இந்நிலையில், தொழில் நெருக்கடியால் பல்வேறு நிறுவனங்கள், 3 மாதம் வட்டி, அசல் தொகை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. ஆனால், வங்கி அதிகாரிகள் இதுபற்றி பரிசீலிக்காமல், அதிரடியாக ஜப்தி நடடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. தற்போது, அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான வர்த்தக நிச்சயமற்ற தன்மையால் பல அமெரிக்க நிறுவனங்கள் இந்திய ஆடை உற்பத்தியாளர்களுக்கு ஆர்டர் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வங்கிகள் ஆதரவு அளித்தால், உள்ளூரில் தொழில் வளம் பெருகவும், வங்கிகளின் கடனை திருப்பி செலுத்தவும் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பது தொழில்முனைவோர்களின் கருத்து....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/3F3aYQAA

📲 Get Tiruppurnews on Whatsapp 💬