வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அதிகாரியை பணிமாற்றம் செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்ட் மனு

  |   Perambalurnews

பெரம்பலூர்,அக்.17:வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலக வளர்ச்சித்துறை அதிகாரியை பணிமாற்றம் செய்யக்கோரி இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார்மனு அளிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி யின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஞானசேகரன் தலைமையில், அக்கட்சி யின் மாவட்ட துணைச் செயலாளர் வெங்கலம் ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் வேப்பந்த ட்டை ஜெயராமன், மாவட் டத் தலைவர் கை.களத்தூர் ராஜ் உள்ளிட்டோர் நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்திருந்தனர். அவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் அளித்தப் புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது :

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார வளர்ச் சித்துறை அதிகாரி, பிரம்ம தேசம் ஊராட்சியில் ஊரா ட்சியின் பொதுநிதியில் பணியே செய்யாமலேயே, வேலை செய்ததாக போலி யான வவுச்சர்மூலம் ரூ 49,500 வீதம் 2முறை ஊராட் சிப் பொது நிதியிலிருந்து பணம் எடுக்கப் பட்டுள்ளது. இதேபோல் வேப்பந்தட்டை ஒன்றியத்திலுள்ள 29ஊரா ட்சிகளிலும், மகாத்மா காந் தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பிரதானமாக பயனளித்தி டும் திட்டங்களை முறை யாக பணிசெய்யாமல், போலி ஒப்பந்தக்காரர்கள் பேரில் பில்எடுத்து, முறை கேடு செய்து வருகிறார்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/vXhB9gAA

📲 Get Perambalurnews on Whatsapp 💬