வேலம்பட்டியில் விவசாயிகளுக்கு மண்வள அட்டை

  |   Dharmapurinews

தர்மபுரி, அக்.17: கிராம அளவிலான மண்வள அட்டை வழங்குதல் பென்னாகரம் அருகே வேலம்பட்டியில் நடந்தது.கிராம அளவிலான மண்வள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி அருகே வேலம்பட்டியில் நடந்தது. நிகழ்ச்சியை பென்னாகரம் வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் துணை வேளாண்மை இயக்குனர் உழவர் பயிற்சி மையம் (பொ) புவனேஸ்வரி துவக்கி மண் பரிசோதனை செய்வதன் அவசியம், மண் பரிசோதனையின் அடிப்படையில் உரமிடுவதால் ஏற்படும் நன்மைகள், மண்வள அட்டை எண் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.நிகழ்ச்சியில் வேளாண்மை இயக்குனரக மண்டல அலுவலர் சுரேஷ் குமார் கலந்து கொண்டு பேசும்போது, விவசாயிகள் சரியான முறையில் மண் மாதிரிகள் சேகரித்தல், ஆய்வின் அடிப்படையில் பயிருக்கு உரமிடுதல், அதற்குத் தேவையான உரங்கள் உரக்கடையில் கிடைத்தல் குறித்து விவசாயிகளிடம் விரிவாக ஆய்வு செய்தார்.நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் மாநில திட்டம் (பொ) தேன்மொழி, வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம்(பொ) சாமுவேல், வேளாண் அலுவலர் தரக்கட்டுப்பாடு சிவசங்கரி மற்றும் மண் மாதிரி பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் சரோஜா, துணை வேளாண்மை அலுவலர் அருணகிரி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கோகிலா, முருகேசன், உதவி தொழில்நுட்ப மேலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நுண்ணூட்ட கலவை மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/yHuTrwAA

📲 Get Dharmapurinews on Whatsapp 💬