வெள்ளோட்டில் தனியார் மில்லில் இருந்து வெளியேறும் கழிவுநீர், புகையால் சுற்றுச்சூழல் மாசு

  |   Erodenews

ஈரோடு, அக். 17: வெள்ளோட்டில் உள்ள தனியார் பேப்பர் மில்லில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் புகையால் சுற்றுச்சூழல் மாசு அடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் ஈரோடு கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம் வெள்ளோடு தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சக்திபாலமுருகன் ஊர் பொதுமக்கள் கலெக்டர் கதிரவனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வெள்ளோடு பள்ளப்பாளையத்தில் தனியார் பேப்பர் மில் இயங்கி வருகிறது. இங்கிருந்து வரும் வேதிப்பொருட்கள் கலந்த கழிவுநீர், நிலத்தில் கலப்பதாலும் மற்றும் குழி தோண்டி கழிவு பொருட்களை நிலத்தில் மூடி விடுவதாலும் அருகில் உள்ள கிணறு, ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மாசுப்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கிறது.

இந்த மில்லில் இருந்து வரும் நச்சு புகையினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவாசக் கோளாறு பிரச்னை ஏற்படுகிறது. பள்ளப்பாளையம் மட்டுமல்லாமல் தொட்டிபாளையம், சிறுவன்காட்டு வலசு, ராச்சம்பாளையம் போன்ற 4 கிராம மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/rdU8nAAA

📲 Get Erodenews on Whatsapp 💬