விவசாய உற்பத்தியாளர் குழும அறிமுக கூட்டம்

  |   Perambalurnews

அரியலூர், அக். 17: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கல்லூர் கிராமத்தில் விவசாய உற்பத்தியாளர் குழும அறிமுக ௯ட்டம் நடந்தது.

திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமன் தலைமை வகித்தார். திருவேரகம் முன்னிலை வகித்தார். மகாலிங்கம் வரவேற்றார். திட்ட அமைப்பாளர் குமார் வாழ்த்தினார். நபார்டு வங்கி மாவட்ட திட்ட மேலாளர் நவீன்குமார் பேசும்போது, மத்திய அரசும், விவசாய வங்கியும் (நபார்டு) இணைந்து விவசாயிகளுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நீர் மேலாண்மைக்காக நீர் வடிகால் பகுதிகளில் சிறு அணைகளை அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் மாநில அரசுடன் இணைந்து விவசாயிகளுக்கு விதைகள், மருந்துகள், பூச்சி கொல்லிகள் மானிய விலையில் வழங்குகிறது. இதன் ஒரு பகுதியாக விவசாய உற்பத்தியாளர் குழுமம் மூலமாக விவசாயிகளை ஒருங்கிணைத்து ஒரு அரசு பதிவு பெற்ற நிறுவனமாக உருவாக்கி அதற்கான திட்டத்தை செயல்படுத்துகிறது.

இந்த திட்டத்தின் மூலமாக அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றிய பகுதியில் விவசாயிகளின் மேம்பாட்டுக்காகவும், அரசின் விவசாயம் சார்ந்த (மானியம்) இந்த பகுதி விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கவும், நிலம் உள்ள, நிலமற்ற விவசாயிகள், விவசாயத்தில் ஆர்வமுள்ள அனைவரும் இந்த குழுமத்தில் பங்கு பெறலாம். விவசாய உற்பத்தி பொருட்களை மதிப்புக்௯ட்டி விற்பனை செய்யவும், பணப்பயிர் உற்பத்திக்கும் ஆலோசனை வழங்கப்படும். விவசாயம் சார்ந்த வல்லுனர்களை கொண்டு மாதாந்திர ௯ட்டம் நடத்தப்படும். விவசாய பொருட்கள் சந்தையில் விற்பனை குறைவாக உள்ள காலங்களில் குடோன்களில் சேமித்து வைத்து லாபகரமாக விற்பனை செய்யலாம் என்றார். ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் நன்றி ௯றினார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/yn9xYAAA

📲 Get Perambalurnews on Whatsapp 💬