இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு👍

✍இளவேனில்🌄

🏛நாங்குநேரி மற்றும் 🏛விக்கரவாண்டி 🗳இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது😯. சில இடங்களில், கொட்டும் ☔மழைக்கு இடையிலும், 👥வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்திருந்து 👆வாக்களித்தனர். இதனையடுத்து, ⌚5 மணி நிலவரப்படி, 🏛நாங்குநேரியில் 62.59 விழுக்காடு வாக்குகளும், 🏛விக்கரவாண்டியில், 76.41 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன👍. காலை 7 மணிக்கு துவங்கி அமைதியாக, வன்முறை ஏதும் இல்லாமல் நடைபெற்ற வாக்குப்பதிவு ⌚6 மணியுடன் நிறைவடைந்தது😌. இதனையடுத்து 🗳வாக்குப்பதிவு இயந்திரங்களை 🔒சீல் வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வரும் 📆24ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது🔈. அன்றைய தினம் இரு தொகுதியில் வெற்றி வேட்பாளர்கள் பெயர் தெரியவரும்🎉 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬