🌊ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து 💦தண்ணீர் திறக்க உத்தரவு⚖

✍இளவேனில்🌄

🌊ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து 💦தண்ணீர் திறப்பது குறித்து 🏛தமிழக முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி ஓர் அறிக்கையினை📜 வெளியிட்டுள்ளார். அதில் அவர், "🌊ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேளாண் பெருங்குடி 👥மக்களிடமிருந்து 🙏கோரிக்கைகள் வந்ததையடுத்து, ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் வரும் 📆25ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்⚖. இதன் மூலம் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி 🏛மாவட்டங்களில் உள்ள 🏝6 ஆயிரத்து 250 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் 🏝பாசன வசதி பெறும். நீரை சிக்கனமாக பயன்படுத்தி, 💦நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர்மகசூல் பெற வேண்டும் என்று 🌾விவசாயிகளை 🙏கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬