காங்கிரஸ் 👤எம்.பி வசந்தகுமார் கைது⛓

✍இளவேனில்🌄

🏛திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 🗳இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பரப்புரை🎙 ஓய்ந்த நிலையில், வெளியூரை சேர்ந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டனர்😯. இந்நிலையில் 🏛நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கழுங்கடி பகுதியில் காங்கிரஸ் எம்பி 👤வசந்தகுமாரை 👮போலீசார் கைது⛓ செய்தனர். வெளிநபரான வசந்தகுமார் நாங்குநேரியில் தங்கியிருந்ததாக 👮போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது😳. இந்நிலையில் 🏛பாளையங்கோட்டையில் இருந்து 🏛நாகர்கோவிலுக்கு சென்ற தம்மை, 👮போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததாக எம்பி வசந்தகுமார் தெரிவித்தார்🙄. இது குறித்து 📰செய்தியாளர்களிடம் பேசிய அவர், 💺ஆளுங்கட்சிக்கு தோல்வி😟 பயம்😨 ஏற்பட்டு உள்ளதாகவும், தாம் எந்த 🗳வாக்குச்சாவடிக்கும் செல்லவில்லை🚫 எனவும் கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬