தாம்பரம் அருகே பிரபல நகைக்கடையின் ஷட்டர் கதவு தானாகப் பூட்டிக் கொண்டதால் பல மணி நேரம் சிக்கிய ஊழியர்கள்: ஷட்டரை வெட்டி மீட்பு

  |   Chennainews

சென்னை: தாம்பரம் அருகே பிரபல நகைக்கடையின் ஷட்டர் கதவு தானாகப் பூட்டிக் கொண்டதால் உள்ளே ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். தீயணைப்புத் துறையினர் ஆள் நுழையும் அளவு ஷட்டரை வெட்டி ஊழியர்களை மீட்டனர். தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தில் தனிஷ்க் என்கிற பிரபல தங்க, வைர நகைக்கடை உள்ளது. தானாக இயங்கும் தானியங்கி ஷட்டர், எலக்ட்ரானிக் வகை பூட்டுகள் என இந்தக்கடையில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளது. நேற்று வார இறுதி மற்றும் தீபாவளி நேரம் என்பதால் அதிக கூட்டம் இருந்தது.

வாடிக்கையாளர்கள் சென்ற பின் இரவு 10 மணியளவில் ஊழியர்கள் கிளம்ப ஆயத்தமானார்கள். கணக்குகள் முடிக்கும் நேரம் வாடிக்கையாளர்களை அனுமதிக்காமல் இருக்க பாதி அளவுக்கு ஷட்டரை இறக்கி வைப்பார்கள். அதேபோன்று கடையின் காவலாளி ஷட்டரைப் பாதி அளவுக்கு இறக்க 30 அடி உயரமுள்ள ஷட்டர் கிடுகிடுவென இறங்கி தானியங்கி பூட்டு தானாகப் பூட்டிக்கொண்டது. எலக்ட்ரானிக் லாக்கும் உடனடியாக லாக் ஆனது. இதனால் கடையின் உள்ளே இருந்த ஊழியர்கள் கடைக்குள்ளேயே சிக்கிக் கொண்டார்கள். கடையின் கதவைத் திறக்க காவலாளி முயன்றார். ஆனால் எலக்ட்ரானிக் பூட்டும் திறக்கவில்லை, ஷட்டரையும் கீழிருந்து மேலாக ஏற்ற முடியவில்லை....

போட்டோ - http://v.duta.us/dVjiRwEA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/dEIdjgAA

📲 Get Chennainews on Whatsapp 💬