🏛தமிழகம் மற்றும் 🏛புதுச்சேரியில் இடைத்தேர்தலுக்கான 🗳வாக்குப்பதிவு தொடங்கியது🎉

✍இளவேனில்🌄

🏛தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான 🗳இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது🎊. இன்று காலை ⌚7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. 🏛நாங்குநேரி தொகுதியில் 👥2,57,418 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக ⛺170 மையங்களில் 299 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 🏛விக்கிரவாண்டி தொகுதியில் 👥2,23,387 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 🏛விக்கிரவாண்டி தொகுதியில் ⛺139 இடங்களில் மொத்தம் 275 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 🗳தேர்தல் பணிகளில் 👥1,930 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்😯. மேலும் 🗳தேர்தல் 💪பாதுகாப்பு பணியில் 👮போலீசார், துணை ராணுவ படையினர் மற்றும் அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்😌. இதேபோன்று 🏛புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது🎉. இதனிடையே, நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளில் 🗳இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ⌚7 மணிமுதல் தொடங்கி நடந்து வருகிறது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬