🐄பசுவின் வயிற்றில் 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்😨

✍இளவேனில்🌄

🏛சென்னை திருமுல்லைவாயிலில் வசித்து வருபவர் 👤முனிரத்தினம். இவர் தனது 🏡வீட்டில் 🐄பசு மாடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் சில 📆நாட்களாக இவரது 🐄மாடு சிறுநீர் மற்றும் சாண இடாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளது😟. அதனால் அருகில் இருந்த 🐄கால்நடை 🏥மருத்துவமனைக்கு பசுவை கொண்டு சென்றார். பசுவை பரிசோதித்து👀 பார்த்த மருத்துவர்கள், 🏛வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். அங்கு பசுவை பரிசோதித்த 🤵மருத்துவர்கள் அதன் வயிற்றில் கழிவுப்பொருட்கள் அடைத்துள்ளதைக் கண்டுபிடித்தனர்😳. அதன்பிறகு, 🐄பசுவின் வயிற்றில் 💉அறுவை சிகிச்சை செய்து சுமார் 52 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை😨 வெளியில் எடுத்தனர். அறுவை சிகிச்சை முடிந்து தற்போது 🐄பசு, நன்றாக இருப்பதாக👍 மருத்துவர்கள் தெரிவித்துள்ளது🔈 குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬