அடுத்த 24 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழை மழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

  |   Coimbatorenews

அடுத்த 24 மணிநேரத்தில் தர்மபுரி, ஈரோடு,நீலகிரி, கிருஷ்ணகிரி,சேலம் இந்த 5 மாவட்டங்களில் அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது .

வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும்,தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர்,கோவை,ஈரோடு,கரூர், திருச்சி, அரியலூர்,வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான முதல் அடைமழை (கனமழை) பெய்ய வாய்ப்பு உள்ளது எனதெரிவிக்கப்பட்டு உள்ளது

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில், அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நெடுங்கல்லில் 10 cm, கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் 8 cm மழையும் பதிவாகி உள்ளது.

இதே போன்று, கிருஷ்ணகிரி ராயக்கோட்டை ஆகிய இடங்களில் 5 cm மழையும் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போட்டோ - http://v.duta.us/phHWowAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/WEPO1QAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬