அனைத்துத் தரப்பு மக்களுக்குமான விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்: ஜி.கே.வாசன் அறிக்கை

  |   Chennainews

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு விவசாய நிலங்களை, நீர் ஆதாரத்தை, சுற்றுப்புறச்சூழலை, மனித உயிரைப் பாதிக்கின்ற வகையில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கும், எரிவாயு கிணறுகள் அமைப்பதற்கும் மக்கள் எதிர்ப்பை மீறி செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

இந்த ஓராண்டில் காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்காக ஓஎன்ஜிசி 489 எண்ணெய்க் கிணறுகள் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பித்ததில் பெருமளவுக்கு அனுமதியும் பெற்றுவிட்டது. கடந்த செப்டம்பர் 25 அன்று ஓஎன்ஜிசியின் சென்னை அலுவலகம் மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் காவிரிப் படுகையில் கடலூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் மேலும் 20 புதிய எண்ணெய்க் கிணறுகளை அமைக்க ஆய்வு செய்வதற்கான அனுமதியைக் கோரியது. இக்கிணறுகள் சுமார் 3,500 மீட்டர் முதல் 5 ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கு அமைக்கப்பட உள்ளது....

போட்டோ - http://v.duta.us/VrdvPwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/-zy6kgAA

📲 Get Chennainews on Whatsapp 💬