அரசு ஆங்காங்கே நட்டுவந்தாலும் செங்கல் சூளைகளுக்காக அழிக்கப்படும் பனை மரங்கள் மரங்களை காக்க நடவடிக்கை தேவை கள் இறக்க அனுமதி வேண்டும்
ஆர்.எஸ்.மங்கலம், அக்.9: பரவலாக தமிழகம் முழுவதும் பனை விதைகள் நடப்பட்டு வந்தாலும், பனை மரங்கள் நாளுக்கு நாள் அழிந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் கற்பக விருட்சம் என்று அழைக்கப்படுவது பனை மரமாகும். பனை மரம் ராமநாதபுரம் மாவட்டம் சிவகங்கை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி விருதுநகர் போன்ற பல மாவட்டங்களில் அதிகமாக உள்ளது.
பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய அனைத்து பொருள்களுமே மிகவும் பயனுள்ளது மட்டுமல்லாமல், மருத்துவக் குணம் வாய்ந்தவை. பதநீர் உடல் சூட்டை தணிப்பதற்கு மிகவும் உகந்தது. பதநீரில் இருந்து காய்ச்சி எடுக்கும் கருப்பட்டி, கற்கண்டு மிகவும் மருத்துவக் குணம் வாய்ந்தவையாகும்.
பனையில் இருந்து கிடைக்க கூடிய எந்த பொருளும் கழிவு இல்லை. அனைத்து பொருள்களுமே பயனுள்ளவை. அதில் முக்கியமாக பனை ஓலை பாய்முடைய, விசிறி தயார் செய்ய பயன்படுகிறது. ஓலை பாயில் படுத்து உறங்கினால் உடலுக்கு நல்லது. இதமான நல்ல தூக்கம் வரும். ஒலை விசிறி கோடை காலத்திற்கு மிகவும் சிறந்தது. இந்த விசிறி கொண்டு வீசினால் இதமான நல்ல இயற்கை காற்று கிடைக்கும், ஒலைகளில் வீடு கட்டி குடியிருந்தால் ஏசி தேவையில்லை. அவ்வளவு சுகாதாரமாக இருக்கும். நுங்கு, கோடை காலத்திற்கு மிகவும் உகந்தது. அதுபோல் பணங்காய், பணங் கிழங்கு என்று அத்தனையும் பயனுள்ளது. பனைத் தொழில் நலிவுற்று போனதற்கு முக்கிய காரணம் அயல்நாட்டு மது விற்கும், உள்நாட்டில் தயாரிக்கும் மதுபான உரிமையாளர்களுக்கும் அரசுகள் காட்டி வரும் சலுகைகள் தான். சாராயம், பிராந்தி, விஸ்கி போன்ற பானங்களில் ஏற்படும் தீமை அதிகம். ஆனால் கள்ளு பானம் விற்க அரசு தடை விதித்துள்ளது. பதநீருக்கு சுண்ணாம்பு சேர்கணும். ஆனால் கள்ளு இயற்கையாக கிடைக்க கூடியது. இதில் பெரும்பாலும் தீமை இல்லை. ஒரு காலத்தில் மருத்துவர்களே பரிந்துரை செய்த பானம் கள்ளு....
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/5O_ttAAA