அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு பாதிப்பை கண்டறியும் சோதனை வசதி வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

  |   Sivaganganews

இளையான்குடி, அக்.9: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் எலீசா சோதனை வசதிகளை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கையை தவிர, மற்ற இடங்களில் செயல்படும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்குவை கண்டறியும் எலீசா பரிசோதனை வசதி இல்லை. மாவட்டம் முழுவதும் 13 அரசு மருத்துவமனைகள், 42 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகள், டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனரா என பரிசோதிக்க அரசு மருத்துதுவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ரத்த பரிசோதனை ஆய்வகங்களில் ரத்த மாதிரிகளை கொடுத்து வருகின்றனர்.

ஆனால் டெங்கு உள்ளதா, இல்லையா என பரிசோதிக்கப் பயன்படும் எலீசா சோதனை வசதிகள் இல்லாததால் வெறும் காய்ச்சலுக்குரிய மாத்திரை, மருந்துகளை உட்கொன்டு வருகின்றனர். மேலும் டெங்குவை பரிசோதிக்க தேவையான கருவிகள், மருந்துகள் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் தனியார் ரத்த பரிசோதனை மையங்களுக்குச் செல்லுமாறு மருத்துவமனை ஊழியர்கள் பரிந்துரைக்கின்றனர். வேறு வழியின்றி பாதிக்கப்பட்டவர்கள் பரமக்குடி, சிவங்கை, ராம்நாடு, மதுரை ஆகிய இடங்களில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை மையங்களில் ரூ.800 முதல் ரூ.1200 வரை செலுத்தி டெங்கு பரிசோதனை செய்து கொள்கின்றனர். இதனால் ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/jZ4oegAA

📲 Get Sivaganganews on Whatsapp 💬