🤵அரவிந்த் கெஜ்ரிவால் ✈வெளிநாடு பயணத்துக்கு அனுமதி மறுப்பு🚫

✍இளவேனில்🌄

✈ஐரோப்பிய நாடான டென்மார்கில், தட்ப வெப்ப மாற்றம் குறித்த 👥மாநாடு, இன்று துவங்கி🎉, 12ம் தேதி வரை நடக்கிறது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த, 100க்கும் அதிகமான மேயர்கள் பங்கேற்கின்றனர்👍. இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்பி, வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி 🙏கோரி, 🤵கெஜ்ரிவால் விண்ணப்பித்தார். ஆனால் நேற்று வரை அனுமதி வழங்கப்படவில்லை😯. இது குறித்து ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில்🎙, "டென்மார்க்குக்கு விடுமுறையில் செல்ல, கெஜ்ரிவால் அனுமதி கேட்கவில்லை. அங்கு நடக்கும் தட்ப வெப்ப 👥மாநாட்டில் பங்கேற்கவே அனுமதி கேட்டார்😳. மாசு கட்டுப்பாட்டை குறைக்க, 🇮🇳இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி, பல்வேறு நாடுகளை சேர்ந்த மேயர்களுடன் விவாதிக்கவே🗣, டென்மார்க் செல்ல கெஜ்ரிவால் விரும்பினார். 📆ஒரு மாதத்துக்கு முன்பே அனுமதி கேட்டு, கெஜ்ரிவால் 📄கடிதம் அனுப்பியும், இதுவரை பதில் வரவில்லை😟. எங்களிடம் மோடி 🏛அரசு, விரோதமாக😡 நடந்து கொள்வதற்கான காரணம் தெரியவில்லை🚫" என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சியினர் 🏛மத்திய அரசுக்கு 😡கண்டனம் தெரிவித்துள்ளார்கள்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬