ஆனக்குழி சி.எஸ்.ஐ. சபை 199வது சபை நாள் விழா 11ம் தேதி தொடங்குகிறது

  |   Kanyakumarinews

திங்கள்சந்தை, அக். 9: குளச்சல் அருகே ஆனக்குழி சி.எஸ்.ஐ. சபையின் 199வது சபை நாள் விழா மற்றும் நற்செய்தி பெருவிழா கூட்டங்கள் வரும் 11ம் ேததி தொடங்கி 3 நாட்கள் சபை வளாகத்தில் நடக்கிறது. விழாவின் முதல் நாளன்று மாலை 6.30 மணிக்கு ஆனக்குழி சபை திருப்பணியாளர் ஸ்டாலின் ஜெபராஜ் முன்னிலையில் அம்சி முக்காடு சி.எஸ்.ஐ. ஆயர் எட்வின் ஜெபக்குமார், பாலப்பள்ளம் சிஎஸ்ஐ ஆயர் சாம்ரிச்சர்டு நெல்சன், தெருவுக்கடை சி.எஸ்.ஐ. ஆயர் சாம் விக்டர் ஆகியோர் தலைமையில் ஜீவ நீரோடை ஊழியங்கள் தேவ செய்தியாளர் சாம்சன் பால் தேவ செய்தி அளிக்கிறார். தொடர்ந்து மொபைல் காஸ்பல் டீம் துதிபாடல்களும் நடக்கிறது.

3 நாட்கள் நடைபெறும் இந்நற்செய்தி பெருவிழா கூட்டத்தின் இறுதிநாளான 13ம் தேதி காலை 9 மணிக்கு மத்திகோடு சேகர ஆயர் ஸ்டீபன் தலைமையில் பாலப்பள்ளம் பாஸ்ட்ரேட் ஆயர் சாம் ரிச்சர்டு நெல்சன், சபை திருப்பணியாளர் ஸ்டாவின் நெல்சன் ஆகியோர் முன்னிலையில் சாம்சன் பால் தேவ செய்தி அளிக்கிறார். தொடர்ந்து சபை நாள் விழா, சிறப்புத் தொழுகை, திருமுழுக்கு, நன்றி படைப்பு, அன்பின் விருந்து, திருவிருந்து ஆகியவை நடக்கிறது. விழாவில் அனைத்து மக்களும் கலந்து கொள்ளுமாறு ஆனக்குழி சி.எஸ்.ஐ. சபைக்குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/42WRgAAA

📲 Get Kanyakumarinews on Whatsapp 💬