ஆயுதபூஜையையொட்டி சிறப்பு பேருந்துகளில் பயணித்தவர்களின் விவரம் குறித்து போக்குவரத்துத்துறை அறிவிப்பு

  |   Chennainews

சென்னை: ஆயுதபூஜையையொட்டி சிறப்பு பேருந்துகளில் பயணித்தவர்களின் விவரம் குறித்து போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் அக்டோபர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணி நேர நிலவரப்படி 1 லட்சத்து 49 ஆயிரத்து 450 பயணிகள் சென்னை திரும்பியுள்ளதாக போக்குவரத்துத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜையையொட்டி பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று வர வசதியாக அக்டோபர் 4 மற்றும் 5ம் தேதிகளில் சென்னை சென்ட்ரல், கோயம்பேடு, பூவிந்தவல்லி, தாம்பரம், கே.கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதை தொடர்ந்து அக்டோபர் 4 மற்றும் 5ம் தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 225 பேருந்துகள் வீதம் 1,695 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 6 ஆயிரத்து 145 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்நிலையில் ஆயுதபூஜை கொண்டாட்டங்கள் முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பியுள்ள பயணிகளின் எண்ணிக்கை குறித்து போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அக்டோபர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணி நேர நிலவரப்படி 2 ஆயிரத்து 289 பேருந்துகளில் இருந்து 1 லட்சத்து 49 ஆயிரத்து 450 பயணிகள் சென்னை திரும்பியுள்ளதாக போக்குவரத்துத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ - http://v.duta.us/dTvlTgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/QqoWDwAA

📲 Get Chennainews on Whatsapp 💬