ஆயுதபூஜை விற்பனைக்கு வந்த கரும்புகள் தேக்கம்

  |   Tiruppurnews

திருப்பூர்,அக்.9: திருப்பூருக்கு ஆயுதபூஜை விற்பனைக்காக கொண்டு வந்த கரும்புகள் சரிவர விற்பனை ஆகாததால் தேக்கமடைந்துள்ளது. திருப்பூர் மாநகர் பகுதியில் சுமார் 200 டன் கரும்பு ஆயுதபூஜை விற்பனைக்காக வெளி மாவட்டங்களிலிருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டது. மொத்த வியாபாரிகள், தென்னம்பாளையம் தினசரி சந்தை, மாநகர் பகுதியில் செயல்படும் மளிகை கடைகளுக்கு ஜோடி ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்தனர். சிறு வியாபாரிகள் கடந்த 6ம் தேதி ஜோடி ரூ.100க்கு விற்பனையை துவக்கினர். படிப்படியாக ரூ.80, ரூ.70, ரூ.60 என விலை குறைத்து விற்பனை செய்தனர். முதல் நாளில் கரும்பு விலை அதிகம் என்பதால், பொது மக்கள் ஒரு ஜோடி கரும்பு மட்டும் வாங்கிச் சென்றதால், வியாபாரிகள் எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகவில்லை. வியாபாரிகளில் சிலர், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரோட்டின் ஓரத்தில் கரும்புகளை வைத்து, கடந்த மூன்று நாட்களாக விற்பனை செய்தனர். இருந்தும் பொது மக்கள் அதிகளவு வாங்காததால் கரும்பு விற்பனையாகாமல் தேக்கமடைந்தது. பண்டிகை நாட்கள் முடிந்ததால் மீதமுள்ள கரும்பை எடுத்துச்செல்ல வேன் வாடகை கொடுத்து செலவு செய்வதை தவிர்க்க ஜோடி ரூ.20க்கு நேற்று விற்பனை செய்தனர். இந்த ஆண்டு கரும்பு எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகாததால், வியாபாரிகளுக்கு கொள்முதல் செலவு, லாரி வாடகை கடந்த மூன்று நாட்களாக சாப்பாட்டு செலவு போக குறைந்தளவே வருமானம் கிடைத்தது. இதனால் கரும்பு வியாபாரிகள் வேதனையடைந்தனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/yK96bgAA

📲 Get Tiruppurnews on Whatsapp 💬